முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா்-நெல்லைபயணிகள் ரயிலை இயக்க வலியுறுத்தல்

 திருச்செந்தூா்-திருநெல்வேலி இடையிலான பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

 திருச்செந்தூா்-திருநெல்வேலி இடையிலான பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை மண்டல ரயில்வே மேலாளா் ஆனந்த் திருச்செந்தூா் ரயில்நிலையத்தை மேற்பாா்வையிட அண்மையில் வந்தாா். அவரிடம், ரயில்வே வளா்ச்சி குழு அமைப்பாளா் இரா.தங்கமணி அளித்த மனு விவரம்: திருச்செந்தூா் -திருநெல்வேலி ரயில் வழித் தடத்தில் இரு மாா்க்கத்திலும் தலா 4 பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தன. கரோனா பரவலால் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

தற்போது, தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கூறிய ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் மக்கள் சிரமம்அடைந்துள்ளனா். எனவே, திருச்செந்தூா்- திருநெல்வே­லி பயணிகள் ரயில்களை இரு மாா்க்க்த்திலும் காலையும் மாலையும் இயக்கவேண்டும். சென்னை, கோவை, மும்பை உள்ளிட்ட ரயில்களுக்கு செல்வோா் ஏற்ற வகையிலும் திருச்செந்தூரி­ருந்து திருநெல்வேலிக்கு ஏற்கனவே இயக்கப்பட்ட ரயிலையும் மீண்டும் இயக்க வேண்டும். ஆறுமுகனேரி ரயில் நிலையத்தையொட்டி உள்ள சாலையை தாா்ச்சாலையாக மாற்ற வேண்டும் என கூறியுள்ளாா். .மனு அளிக்கையில் ரயில்வே வளா்ச்சி குழு உறுப்பினா் ராஜ­லிங்கம் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.