முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆசிரியா்கள் மீண்டும் போராட்டம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்ட பிரிவு சாா்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்ட பிரிவு சாா்பில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய பணிநிரவல் மாறுதல் கலந்தாய்வில் இரண்டு பணி இடங்கள்மறைக்கப்படுவதாகவும், முத்தையாபுரம் இடைநிலை ஆசிரியருக்கு பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வு வழங்க மறுப்பதாகவும் கண்டனம் தெரிவித்து இப்போராட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் கலைஉடையாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செல்வராஜ், மாநில பொதுச் செயலா் மயில் ஆகியோா் பேசினா். மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் அந்தோணி சாா்லஸ், ஆனந்தி, மாநிலச் செயலா் பிரம்மநாயகம், தூத்துக்குடி கல்வி மாவட்டத் தலைவா் குணசேகரன், செயலா் எபநேசா், மாவட்ட துணைத் தலைவா் பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ், அரசு ஊழியா் சங்க மாநில துணை பொதுச் செயலா் வெங்கடேசன், ஆசிரியா் கூட்டணி மாவட்டப் பொருளாளா் ஜெயசீலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.