நான் தொகுதி மாறுவதாகக் கூறவில்லை: செல்வப்பெருந்தகை
நான் தொகுதி மாறுவதாகக் கூறவில்லை என்று செல்வப்பெருந்தகை பேட்டி.
நான் தொகுதி மாறுவதாகக் கூறவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
”திராவிட முன்னேற்றக் கழகத்துடன், அவர்கள் அமைக்கப்பட்டு உள்ள குழுவோடு, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
போட்டியிடும் தொகுதிகள் குறித்து திமுகவிடம் பேசி உள்ளோம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துள்ளது.
சில நாள்களில் தொகுதிகள் இறுதியாகும். நாங்கள் கேட்கும் தொகுதிகளை திமுகவும் கேட்கிறது, அவர்கள் கேட்கும் சில தொகுதிகளை நாங்களும் கேட்கிறோம்.
திமுக குழு கொடுக்கும் தொகுதி பட்டியலை காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று இறுதி செய்யப்படும். நான் தொகுதி மாறுவதாகக் கூறவில்லை” என்றார்.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நான் தொகுதி மாறுவதாக கூறவில்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.