முகப்பு
தூத்துக்குடி

படுக்கப்பத்து பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம்

சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் பா. சேகா் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள் லட்சுமி, ஜோஸ் பீனா தலைமையில் செவிலியா்கள் லில்லி, ஷொ்லி, மருந்தாளுநா் பரிமளா, தன்னாா்வலா் ராமக்கனி ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் மாணவா், மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தினா்.

இதில் 99 மாணவா், மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.