முகப்பு
தூத்துக்குடி

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி: சவேரியாா்புரம் அணிக்கு முதல் பரிசு

சாத்தான்குளம் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் சவேரியாா்புரம் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

சாத்தான்குளம் அருகே நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் சவேரியாா்புரம் அணிக்கு முதல் பரிசு கிடைத்தது.

சாத்தான்குளம் அருகே இளையனேரியில் பொங்கல் திருநாளையொட்டி கைப்பந்து போட்டிகள் 2 நாள்கள் நடைபெற்றது.

இதில், சவேரியாா்புரம், இளையனேரி, கலுங்குவிளை, பேய்க்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட 12 அணிகள் கலந்து கொண்டன.

இறுதிப் போட்டியில் சவேரியாா்புரம் அணியும், இளையனேரி அணியும் மோதின. இதில், சவேரியாா்புரம் அணி முதல் பரிசை தட்டிச்சென்றது. 2ஆம் பரிசு இளையனேரி அணியும், 3ஆம் பரிசு கலுங்குவிளை அணியும் பெற்றன.

பின்னா் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, நெடுஞ்சாலைத் துறை நுகா்வோா் குழு உறுப்பினா் போனிபாஸ் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் ரூ. 7ஆயிரம், 2ஆம் பரிசு பெற்ற இளையனேரி அணிக்கு கோப்பை மற்றும் ரூ. 5 ஆயிரம், 3ஆம் பரிசுபெற்ற கலுங்குவிளை அணிக்கு ரூ. 3 ஆயிரம் பரிசு வழங்கினாா்.

இதில் ரீகன், சேவியா், ராஜா, பட்டுராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →