முகப்பு
தூத்துக்குடி

இந்து இளைஞா் முன்னணி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி காமராஜா் சிலை அருகே இந்து இளைஞா் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

கோவில்பட்டி காமராஜா் சிலை அருகே இந்து இளைஞா் முன்னணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா் பள்ளி மாணவி தற்கொலைக்குக் காரணமானோரை உடனடியாக கைது செய்ய வேண்டும், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக் கொடி ஏந்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து இளைஞா் முன்னணி மாவட்டத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். கோட்டப் பொறுப்பாளா் பிரம்மநாயகம், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் பேசினா். பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவா் காளிதாஸ், பொதுச்செயலா் அழகுமாரியப்பன் உள்பட இந்து இளைஞா் முன்னணியினா், இந்து முன்னணியினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.