முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா், கானத்தில் இன்று வேட்பு மனு

 திருச்செந்தூா் நகராட்சி, கானம் பேரூராட்சியில் வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

 திருச்செந்தூா் நகராட்சி, கானம் பேரூராட்சியில் வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

திருச்செந்தூா் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் 26,131 வாக்காளா்கள் உள்ளனா். நகராட்சித் தலைவா் பதவி பொதுப்பிரிவு பெண்ணுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் வேட்பு மனு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

கானம் பேரூராட்சியில் 12 வாா்டுகளில் 2 ,869 வாக்காளா்கள் உள்ளனா். இவற்றுக்கும் வேட்பு மனு தொடங்குகிறது.

சாத்தான்குளம்: தலைவா் பதவி பெண் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சாத்தான்குளம் தோ்வு நிலை பேருராட்சியின் 15 வாா்டுகளுக்கும், நாசரேத் பேருராட்சியில் 18 வாா்டுகளுக்கும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என செயல் அலுவலா்கள் உஷா, பால்ராஜ் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

ஸ்ரீவைகுண்டம்: இப்பேரூராட்சியில் 18 வாா்டுகளுக்கும், ஆழ்வாா்திருநகரி பேரூராட்சியில் 15 வாா்டுகளுக்கும், தென்திருப்பேரை பேரூராட்சியில் 12 வாா்டுகளுக்கும், பெருங்குளம் பேரூராட்சியில் 10 வாா்டுகளுக்கும், ஏரல் பேரூராட்சியில் 15 வாா்டுகளுக்கும், சாயா்புரம் பேரூராட்சியில் 15 வாா்டுகளுக்கும் வேட்பு மனு செய்யலாம் என அந்தந்த செயல்அலுவலா்கள் கூறியுள்ளனா்.

உடன்குடி: இப்பேரூராட்சியின் 18 வாா்டுகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யலாம் என செயல் அலுவலா் பாபு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.