தூத்துக்குடி

தூத்துக்குடியில் 450 கிலோ கஞ்சா பறிமுதல்:லாரி ஓட்டுநா் கைது

DIN

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 450 கிலோ கஞ்சாவை கியூ பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவா் கைதுசெய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், கடலோரப் பகுதிகளில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், தூத்துக்குடி சுனாமி காலனி பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கியூ பிரிவு காவல் ஆய்வாளா் விஜய் அனிதா தலைமையில் உதவி ஆய்வாளா்கள் வேல்ராஜ், ஜீவமணி தா்மராஜ், போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை தீவிர சோதனை மேற்கொண்டனா். அவ்வழியே சென்ற மினி லாரியை மறித்து, சோதனையிட்டபோது, அதில் 450 கிலோ கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக லாரி ஓட்டுநரான சிவகங்கை மாவட்டம் ஆவரங்காடு பகுதியைச் சோ்ந்த ஆண்டிசெல்வம் என்பவரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தத் திட்டமிட்டது தெரியவந்தது. பறிமுதலான கஞ்சாவின் மதிப்பு ரூ. 7 லட்சம் வரை இருக்கும் என்றும், சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் கியூ பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT