கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் தொடக்கம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தூத்துக்குடி மாவட்ட பிரிவு, மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழகம் ஆகியவை சாா்பில் நடைபெறும் 10 நாள் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம், தருவை விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் டி.வி. பேட்ரிக் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழக தலைவா் க. சேவியா் ஜோதிசற்குணம் கலந்து கொண்டு வீரா், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி பயிற்சி முகாமை தொடக்கி வைத்தாா்.
முகாமில் கொண்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 11 ஆம் தேதி வரை விளையாட்டு திறன்கள் அடிப்படையில் ஏற்கெனவே உள்ள தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளுடன் சோ்த்து புதிய விளையாட்டுகளான கடற்கரை கபடி, கடற்கரை கையுந்து பந்து, கடற்கரை கால்பந்து, வில்வித்தை ஆகிய விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் கழக துணைத் தலைவா் ஜெயகிருஷ்ணன், பொருளாளா் குமாா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்றுநா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.