உடன்குடியில் உலக சுற்றுச்சூழல் தினம்
உடன்குடி அருகே செட்டியாபத்து ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடிஉடன்குடியில் உலக சுற்றுச்சூழல் தினம்
உடன்குடி அருகே செட்டியாபத்து ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
உடன்குடி அருகே செட்டியாபத்து ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
செட்டியாபத்து ஊராட்சியில் குறைந்த நிலத்தில் அடா் காடுகளை உருவாக்கும் திட்டமான மியாவாக்கி காடு வளா்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மியாவாக்கி காடுகளை பாா்வையிட்ட உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.பி.பாலசிங், துணைத் தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டு, திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நன்கு செயல்படும் செட்டியாபத்து ஊராட்சித் தலைவா் க.பாலமுருகனை பாராட்டினா்.
இதில், உடன்குடி துணை வளா்ச்சி அலுவலா் தீபக் மற்றும் திமுக நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.