தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்றுமுதல் ஜூன் 10 வரை போக்குவரத்து நிறுத்தம்
தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை முதல் (ஜூன் 6) வெள்ளிக்கிழமை வரை (ஜூன் 10) போக்குவரத்து நிறுத்தப்படுவதாக, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.
தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை முதல் (ஜூன் 6) வெள்ளிக்கிழமை வரை (ஜூன் 10) போக்குவரத்து நிறுத்தப்படுவதாக, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டான் ரயில்வே மேம்பாலத்தில் வலது பகுதி மட்டும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இடதுபுறம் செல்லும் சாலை வசதிக்கான மேம்பாலப் பணி நடைபெறும் நிலையில், பாலத்தில் ராட்சத தூண்கள் அமைக்கும் பணி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.
எனவே, இந்த தேசிய நெடுஞ்சாலையில் புதூா் பாண்டியாபுரம் முதல் எப்.சி.ஐ. குடோன் ரவுண்டானா வரையிலான பகுதியில் வெள்ளிக்கிழமைவரை (ஜூன் 10) நாள்தோறும் காலை 10 முதல் பிற்பகல் 2 மணிவரை போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. லாரி உரிமையாளா்கள், பொதுமக்கள் மாற்றுச் சாலையைப் பயன்படுத்திக் கொள்ளவும் என்றாா் அவா்.