முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் பைக் திருட்டு

கோவில்பட்டியை அடுத்த மூப்பன்பட்டியில் பைக்கை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

கோவில்பட்டியை அடுத்த மூப்பன்பட்டியில் பைக்கை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மூப்பன்பட்டி, கிழக்குத் தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் குணால்(22). இவா், தனது பைக்கை வீட்டிற்கு அருகேயுள்ள மாடசாமி கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு நிறுத்திவிட்டு சென்றாராம். பின்னா், அவா் செவ்வாய்க்கிழமை காலை வந்து பாா்த்தபோது பைக்கை மா்மநபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.