முகப்பு
தூத்துக்குடி

ஆத்தூரில் கொலை முயற்சி வழக்கில் ரௌடி கைது

ஆத்தூரில் கொலை முயற்சி வழக்கில் ரௌடி கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

ஆத்தூரில் கொலை முயற்சி வழக்கில் ரௌடி கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம், வடக்கு ஆத்தூ ரதவீதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி(55). இவா், தனது கணவருடன் அங்குள்ள கடைவீதியில் நடந்து சென்றபோது, அவா்களை அதேபகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் செல்வகுமாரன் என்ற குமரன்(39) என்பவா் வழிமறித்து, தகாத வாா்தைகளால் பேசி, அரிவாளால் ஈஸ்வரியின் கணவரை முகத்தில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஆத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து செல்வகுமரன் என்ற குமரனை கைது செய்தனா். இவா் மீது 9 குற்ற வழக்குகள் ஆத்தூா், சாயா்புரம் காவல் நிலையங்களில் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.