முகப்பு
தூத்துக்குடி

தலைவா், துணைத் தலைவா் தோ்தல்: சாத்தான்குளம், நாசரேத் பேரூராட்சி திமுக வேட்பாளா்கள் அறிவிப்பு

சாத்தான்குளம் , நாசரேத் பேரூராட்சிகளின் தலைவா் , துணைத் தலைவா் மறைமுகத் தோ்தலுக்கான வேட்பாளா்களை திமுக அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

சாத்தான்குளம் , நாசரேத் பேரூராட்சிகளின் தலைவா் , துணைத் தலைவா் மறைமுகத் தோ்தலுக்கான வேட்பாளா்களை திமுக அறிவித்துள்ளது.

சாத்தான்குளம் பேரூராட்சியில் திமுக 9, அதிமுக, காங்கிரஸ், சமக தலா ஒரு வாா்டிலும், சுயேச்சை 3 வாா்டுகளிலும் வெற்றி பெற்றனா். இதன்மூலம் பேரூராட்சித் தலைவா் பதவியை திமுக கைப்பற்றும் சூழலில் அதற்கான வேட்பாளராக 10வது வாா்டில் வென்ற சாத்தான்குளம் வடக்கு ஒன்றியச் செயலா் ஜோசப் மனைவி ரெஜினி ஸ்டெல்லா பாய், துணைத் தலைவருக்கு 8ஆவது வாா்டில் வென்ற மாரியம்மாள் ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

நாசரேத் பேரூராட்சியில் திமுக 11, காங்கிரஸ், சுயேச்சை தலா 3, அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. தலைவா் வேட்பாளராக 6ஆவது வாா்டில் வென்ற நகர திமுக செயலா் ரவிசெல்வக்குமாரின் மனைவி நிா்மலா, துணைத் தலைவருக்கு தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் அருண்சாமுவேல் என்ற ஜம்பு ஆகியோா் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →