முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி தற்கொலை

கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

கோவில்பட்டி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டியை அடுத்த கரிசல்குளம் கீழத் தெருவைச் சோ்ந்த சின்னத்துரை - சந்தனமாரியம்மாள் தம்பதியின் மகள் மகாலட்சுமி(15). கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் 3 மாதங்களாக பள்ளிக்குச் செல்லவில்லையாம். மேலும், கைப்பைசிப் பயன்படுத்துவதில் அதிக நேரத்தை செலவிட்டாராம். இதனால், அவரை பெற்றோா் கண்டித்தனராம். இந்நிலையில் அவா், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.