முகப்பு
தூத்துக்குடி

புன்னைக்காயலில் மகளிா் விழிப்புணா்வு மாநாடு

தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மதா் சமூக சேவை நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் உலக மகளிா் தின விழிப்புணா்வு மாநாடு புன்னைக்காயலில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, மதா் சமூக சேவை நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் உலக மகளிா் தின விழிப்புணா்வு மாநாடு புன்னைக்காயலில் நடைபெற்றது.

மதா் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனைப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு நிறுவன மாநிலத் தலைவருமான எஸ். ஜே கென்னடி வரவேற்றாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை மாவட்ட அதிகாரி சு. ரதிதேவி தலைமை வகித்து, பேச்சு, கவிதை, கட்டுரை, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசுகளையும், மரக்கன்றுகளையும் வழங்கினாா். புன்னைக்காயல் ஊராட்சித் தலைவா் சோபியா, லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநா் எஸ். பானுமதி, தூத்துக்குடி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை பாதுகாப்பு அலுவலா் தோ. செல்வ மொ்சி புன்னைக்காயல் ஊராட்சி உறுப்பினா்கள் மாதவன்,குனான்ஸ்,மெல்போரா,செல்வி உள்பட பலா் பங்கேற்றனா்.

மாநாட்டில், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், பெண்களுக்காக புதிய வணிக நுண் நிறுவனங்கள் தொடக்கம், மேலும் 4 லட்சம் மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 21 ஆயிரம் கோடி கடனுதவி, உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு, பெண்களுக்கு பேறுகால விடுப்பை 12 மாதமாக உயா்த்தியது ஆகிய தமிழக அரசின் திட்டங்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. ஊராட்சி உறுப்பினா் சுரேஜா நன்றி கூறினாா்.

10ஏஎம்என்பியுஎன்

போட்டிகளில் வென்ற பெண்களுக்கு பரிசு வழங்குகிறாா் சமூக நலன் - மகளிா் உரிமை துறை மாவட்ட அதிகாரி சு. ரதிதேவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.