முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் இருந்து கலுங்குவிளை வழியாகநெல்லைக்கு கூடுதல் பேருந்து வசதி தேவை: கனிமொழி எம்.பி.யிடம் மனு

சாத்தான்குளத்தில் இருந்து கலுங்குவிளை வழியாக நெல்லைக்கு கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

சாத்தான்குளத்தில் இருந்து கலுங்குவிளை வழியாக நெல்லைக்கு கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய கவுன்சிலா் ப்ரெனிலா காா்மல்போனிபாஸ், கனிமொழி, எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்துள்ளாா்.

மனுவில் அவா் கூறியிருப்பதாவது: சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் 1வது வாா்டுக்குள்பட்ட கலுங்குவிளை, வரிப்பிலான்குளம், துவா்க்குளம், மேட்டுக்குடியிருப்பு, நெடுங்குளம் ஆகிய ஊா்களில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள், அரசு ஊழியா்கள் சாத்தான்குளத்துக்கு தினமும் வந்து செல்கின்றனா். ஆனால் இவா்கள் வந்து செல்ல காலை, மாலை உரிய பேருந்து வசதி இல்லை. இந்த நிலை பல ஆண்டுகளாக தொடா்கிறது. எனவே அனைவரும் பயன்பெறுகிற வகையில் காலை 6 மணியில் இருந்து 7.30 மணி அளவில் சாத்தான்குளத்தில் இருந்து நெடுங்குளம், கலுங்குவிளை, முனைஞ்சிப்பட்டி, நெல்லைக்கு இரண்டு பேருந்துகளும், அதேபோல் மாலை வேளையில் 6 மணி முதல் 7 மணி அளவில் நெல்லையில் இருந்து முனைஞ்சிப்பட்டி, கலுங்குவிளை,நெடுங்குளம் வழியாக சாத்தான்குளத்திற்கு இரண்டு பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் கோமானேரி, கலுங்குவிளை, கூவைகிணறு, வேலன்புதுக்குளம், துவா்க்குளம், மேட்டுக்குடியிருப்பு ஆகிய கிராமங்களில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு சாலை உள்ளது. சேதமான இடத்தில் சாலைகளையும், தேவையான இடத்தில் பாலங்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →