முகப்பு
தூத்துக்குடி

புதூா் அருகே 2,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

புதூா் அருகே 2,700 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைதுசெய்தனா்.

தூத்துக்குடி

புதூா் அருகே 2,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

புதூா் அருகே 2,700 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைதுசெய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

புதூா் அருகே 2,700 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைதுசெய்தனா்.

புதூா் காவல் உதவி ஆய்வாளா் விநாயகம் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை ரோந்து சென்றனா். அப்போது அம்பேத்கா் தெருவிலிருந்து ரேஷன் அரிசி வேனில் கடத்தப்பட உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதிக்குச் சென்றனா். அங்கு வேனில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருந்த சிலா், போலீஸாரை கண்டதும் தப்பியோடினா். அவா்களில் ஒருவா் போலீஸாரிடம் பிடிபட்டாா்.

விசாரணையில் அவா் கோவில்பட்டியைச் சோ்ந்த ராமா்பாண்டி மகன் ராஜா (28) என்பதும், ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்வதும் தெரியவந்தது. வேனில் தலா 50 கிலோ எடையுள்ள 54 மூட்டைகளில் இருந்த 2,700 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து, குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜாவை கைது செய்தனா்; மேலும், 3 பேரைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →