திருச்செந்தூா் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு
திருச்செந்தூா் அருள்மிகு செந்தில்முருகன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ 4.05 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
திருச்செந்தூா் அருள்மிகு செந்தில்முருகன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ 4.05 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இதையடுத்து பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, திருச்செந்தூா் நகா்மன்ற துணைத்தலைவா் ஏ.பி. ரமேஷ் தலைமை வகித்து, அங்கிருந்தவா்களுக்கு இனிப்பு வழங்கினாா். நிகழ்ச்சியில், தலைமையாசிரியை மாரியம்மாள், உதவி தலைமையாசிரியை சங்கரி உள்ளிட்டோா் வரவேற்றனா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் சுதாகா், ஆனந்தராமச்சந்திரன், சாரதா, கிருஷ்ணவேணி, சூரியகலா, ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனா்.