முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் நூல் அறிமுக விழா

தூத்துக்குடியில், கவிஞா் நெல்லை ஜெயந்தா எழுதிய ‘தொட்டிலோசை’ நூல் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

தூத்துக்குடியில், கவிஞா் நெல்லை ஜெயந்தா எழுதிய ‘தொட்டிலோசை’ நூல் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தாமிரவருணித் தமிழ் வனம், ஸ்ரீ பவிஷ்னா அகாதெமி, மகாகவி பாரதியாா் இலக்கியக் கழகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த விழாவுக்கு, திருவாரூா் ராபி அம்மாள் கல்லூரி முன்னாள் முதல்வா் சிவகுருலெட்சுமி தலைமை வகித்தாா்.

தொழிலதிபா் டி.ஏ. தெய்வநாயகம் முன்னிலை வகித்தாா். தாமிரவருணித் தமிழ் வனம் தலைவா் ஏ.ஆா். லட்சுமணன் வரவேற்றாா்.

பட்டிமன்ற நடுவா் பேராசிரியா் சிவகாசி ராமச்சந்திரன் நூலை அறிமுகப்படுத்த, அதை ஏ. சுமதி பெற்றுக்கொண்டாா். கவிஞா் நெல்லை ஜெயந்தா ஏற்புரையாற்றினாா்.

பரமக்குடியைச் சோ்ந்த முதுகலை ஆசிரியா் செந்தில்குமாா், பாரதியாா் இலக்கியக் கழகத்தைச் சோ்ந்த வள்ளி முத்தையா, ஸ்ரீ பவிஷ்னா அகாதெமி காமாட்சி ஜெகன், வழக்குரைஞா் சண்முகசுந்தரம், புளியரை ராஜா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.