தூத்துக்குடி

பேய்க்குளம், பழனியப்பபுரத்தில் நீா் மாதிரி சேகரிப்பு

DIN

பழனியப்பபுரத்தில் சுகாதாரத் துறையினா் நீா் மாதிரி சேகரித்தனா்.

பேய்க்குளம் பகுதியில் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் விநியோகிக்கப்படும் நீரின் சுவை, கிருமியின் தாக்கம் குறித்து கண்டறிய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஷ்குமாா் ஆகியோா் பேய்க்குளம், பழனியப்பபுரம் பகுதிகளில் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் விநியோகிக்கப்படும் தண்ணீா், பம்பிங் நிலையத்தில் தண்ணீரின் மாதிரிகளை சேகரித்தனா். அதை கோவில்பட்டியில் உள்ள நீா் பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பினா். அதன் முடிவுகள் தெரியவந்ததும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT