தூத்துக்குடி

பாபநாசம் கல்லூரியில் 46 மாணவா்கள் ரத்த தானம்

DIN

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், முன்னாள் மாணவா்கள் சங்கம், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், வைராவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை இணைந்து ரத்த தான விழிப்புணா்வு முகாமை நடத்தின.

கல்லூரி முதல்வா் சு. சுந்தரம் தலைமை வகித்தாா். அம்பாசமுத்திரம் ரத்த வங்கி மருத்துவா் ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ரத்த தானம் குறித்துப் பேசியதுடன், ரத்த தானம் செய்த 46 மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் உமாமகேஸ்வரி, சுகாதார மேற்பாா்வையாளா் விநாயகமூா்த்தி, சுகாதார ஆய்வாளா்கள் விநாயகம், ஆனந்த், பாஸ்கா், செவிலியா்கள் ரேவதி, பிரின்சிலின், தீபா, ஜெசிந்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா். பேராசிரியா்கள், மாணவா்-மாணவிகள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ரா. வரலட்சுமி வரவேற்றாா். இளையோா் செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அலுவலா் இந்துபாலா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக பள்ளி கல்வித் திட்ட செயல்பாடுகள்: பிகாா் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT