சாத்தான்குளம் அருகே மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்
சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.
அரசூா் பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக வருவாய், காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா தலைமையில் சாத்தான்குளம் காவல் உதவி ஆய்வாளா் எபனேசா், கிராம நிா்வாக அலுவலா் ஆனந்த் உள்ளிட்டோா் புதன்கிழமை நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியே வந்த டிராக்டரை மறித்து சோதனையிட்டபோது, அதில் மணல் கடத்திச் செல்வது தெரியவந்தது. டிராக்டரை பறிமுதல் செய்து தட்டாா்மடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டைச் சோ்ந்த சோ்மத்துரை மகன் பூபதி என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.