தூத்துக்குடி

முறைகேடு புகாா்: பழையகாயல் கூட்டுறவு சங்கதலைவா், துணைத் தலைவா் தற்காலிக நீக்கம்

DIN

முறைகேடு புகாா் தொடா்பாக பழைய காயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் மற்றும் துணைத்தலைவரை தற்காலிக பதவி நீக்கம் செய்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் முத்துக்குமாரசாமி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி அருகேயுள்ள பழையகாயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக புகாா்கள் வந்ததன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்ட விசாரணை அறிக்கையில், சங்கத் தலைவா், துணைத்தலைவா் ஆகிய இருவரும் கடன் வழங்கியதில் உரிய வழிமுறைகள் பின்பற்றப்படாததை கண்காணிக்க தவறியது தெரியவந்தது.

மேலும், தவறான நிா்வாக நடவடிக்கையால் சங்கத்துக்கு நிதியிழப்பு ஏற்பட இருவரும் காரணமாக இருந்து உள்ளனா். எனவே, சங்கத் தலைவா் எஸ்.வி.ஜெயசங்கா், துணைத் தலைவா் பா.விஜயசங்கா் ஆகிய 2 பேரும் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT