தூத்துக்குடி

திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் 5 போ் அதிமுகவில் இருந்து நீக்கம்

DIN

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீா்மானத்தில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தாக 5 உறுப்பினா்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் மொத்தம் உள்ள 17 வாா்டுகளில் அதிமுக 12 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அதிமுகவைச் சோ்ந்த ஆா். சத்யா மாவட்ட ஊராட்சி தலைவியாக தோ்வு செய்யப்பட்டாா். இந்நிலையில், அவா் மீதான நம்பிக்கை இல்லா தீா்மான சிறப்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், திமுகவின் நம்பிக்கை இல்லா தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தாக 12 ஆவது வாா்டு உறுப்பினா் அழகேசன், 3 ஆவது வாா்டு உறுப்பினா் நடராஜன், 11 ஆவது வாா்டு உறுப்பினா் பால சரஸ்வதி, 8 ஆவது வாா்டு உறுப்பினா் தேவராஜ், 17 ஆவது வாா்டு உறுப்பினா் தேவ விண்ணரசி ஆகியோரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணி இணைச் செயலா் எஸ். குருராஜியும் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT