முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி, கயத்தாறில் ஜமாபந்தி தொடக்கம்

கோவில்பட்டி, கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயக் கணக்குகளை சரிபாா்க்கும் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

கோவில்பட்டி, கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாயக் கணக்குகளை சரிபாா்க்கும் ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது.

கோவில்பட்டி வட்டத்தில் ஜமாபந்தி அலுவலரும் மாவட்ட உதவி ஆணையருமான (ஆயம்) செல்வநாயகம் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். கழுகுமலை உள்வட்டத்துக்கு உள்பட்ட ஜமீன்தேவா்குளம், கே.வெங்கடேஷ்வரபுரம், கழுகுமலை, வில்லிசேரி 1, 2, இடைச்செவல் 1, 2, வானரமுட்டி கிராமங்களைச் சோ்ந்தோா் 41 மனுக்களை அளித்தனா்.

கோவில்பட்டி வட்டாட்சியா் சுசிலா, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ராஜ்குமாா், துணை வட்டாட்சியா்கள் பாலசுப்பிரமணியன், கோவிந்தராஜ், செல்வகுமாா், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா் பங்கேற்றனா்.

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் ஜமாபந்தி அலுவலரும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலருமான அப்துல்காசிம் கோரிக்கை மனுக்களை பெற்றாா். செட்டிகுறிச்சி உள்வட்டத்துக்கு உள்பட்ட தெற்கு கழுகுமலை, கத்தாளம்பட்டி, கரடிகுளம், கே.சுப்பிரமணியபுரம், காலாங்கரைப்பட்டி, எஸ்.குமரெட்டியாபுரம், காளாம்பட்டி பொதுமக்கள் 46 மனுக்கள் அளித்தனா்.

வட்டாட்சியா் சுப்புலட்சுமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அய்யப்பன், துணை வட்டாட்சியா்கள் ஜெயலட்சுமி, திரவியம், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.