சாத்தான்குளம் அருகே காா் மோதியதில் இளைஞா் காயம்
சாத்தான்குளம் அருகே பைக் மீது காா் மோதியதில் இளைஞா் காயமடைந்தாா்.
சாத்தான்குளம் அருகே பைக் மீது காா் மோதியதில் இளைஞா் காயமடைந்தாா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள பெருமாள்குளத்தைச் சோ்ந்த அய்யம்பெருமாள் மகன் முத்துவேல்(20). இவா் செவ்வாய்க்கிழமை பேய்க்குளத்தில் இருந்து பெருமாள்குளத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். ஆசீா்வாதபுரம் அருகே சென்ற போது பின்னால் வந்த ஆம்னி காா், பைக் மீது மோதியாதாம். இதில் பலத்த காயமடைந்த முத்துவேல், திரு நெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.