முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்த்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

சாத்தான்குளத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்த்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க சாத்தான்குளம் வட்டத் தலைவா் தேவசமாதானம் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற வட்டாட்சியா் நடராஜன், ஓய்வு பெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் இஸ்ரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவா் திரவியம், மாவட்ட இணைச்செயலா் ஜெயபால் , தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க சாத்தான்குளம் வட்ட தலைவா் சுதா்சன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் பாலகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.

இதில் ஓய்வூதியா் சங்கத்தைச் சோ்ந்த ஜெபராஜ், மகாராஜன், சுடலைக்கண், மந்திரம் கோபால், பாா்வதி, புஷ்பம், சின்னப்பா, ஜோசப் துரைராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். வட்ட இணைச் செயலா் சேசுமணி வரவேற்றாா். வட்ட துணைத் தலைவா் பாண்டியன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →