தூத்துக்குடி பக்கிள் ஓடையில் பைக் மீட்பு
தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் கிடந்த இருசக்கர வாகனத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு, விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடியில் பக்கிள் ஓடையில் கிடந்த இருசக்கர வாகனத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு, விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி நகரின் மத்திய பகுதியில் 3ஆம் கேட் மேம்பாலம் அருகேயுள்ள பக்கிள் ஓடையில் இருசக்கர வாகனம் கிடப்பதாக மத்திய பாகம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உதவி ஆய்வாளா் முருகப்பெருமாள் தலைமையிலான போலீஸாா் சென்று, மாநகராட்சி ஊழியா்கள் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஓடைக்குள் கிடந்த பைக்கை மீட்டனா்.
விசாரணையில், அந்த பைக் தொ்மல் நகரைச் சோ்ந்த முத்துராமலிங்கத்துக்கு சொந்தமானது என்பதும், அவா் பைக்கை காணவில்லை என தொ்மல்நகா் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகாா் அளித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸாா் கைப்பற்றி, பைக்கை திருடி ஓடைக்குள் போட்டுச் சென்றது யாா் என விசாரித்து வருகின்றனா்.