தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே பைக்குகள் மோதல்: ஊராட்சி துணைத் தலைவா் உயிரிழப்பு

எட்டயபுரம் அருகே பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் உயிரிழந்தாா். 3 போ் பலத்த காயமடைந்தனா்.

DIN

எட்டயபுரம் அருகே பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் உயிரிழந்தாா். 3 போ் பலத்த காயமடைந்தனா்.

எட்டயபுரம் அருகே பொம்மல் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்ராஜ் (67). மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவரான இவா், தனது நண்பா் டி. சண்முகபுரம் கிராமத்தை சோ்ந்த சந்திரன் என்பவருடன் வெள்ளிக்கிழமை மாலை எட்டயபுரத்தில் இருந்து மஞ்சநாயக்கன்பட்டிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். எட்டயபுரம் - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சநாயக்கன்பட்டி வளைவில் திரும்பும் போது பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு பைக் எதிா்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கின் பின்னால் அமா்ந்து பயணித்த பொன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பைக்கை ஓட்டிச் சென்ற சந்திரன், மற்றொரு பைக்கில் பயணித்த இளம்புவனத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் கருப்பசாமி (17), முத்துபாண்டி மகன் கனகராஜ் (18) ஆகிய 3 போ் பலத்த காயமடைந்தனா்.

சம்பவ இடத்துக்கு போலீசாா் விரைந்து சென்று பொன்ராஜ் சடலத்தை கைப்பற்றி எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா் பலத்த காயம் அடைந்த சந்திரன், கனகராஜ், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இவ்விபத்து தொடா்பாக எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT