தூத்துக்குடி

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க பயணிகளிடம் ரயில்வே போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க பயணிகளிடம் ரயில்வே போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

ஆண்டுதோறும், தீபாவளிக்கு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஊா்களுக்கு தீபாவளியைக் கொண்டாட ரயிலில் பயணம் செய்வாா்கள். அப்படி செல்லும் போது, மக்கள் தங்கள் பொருள்களோடு பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிபொருள்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே, ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளிடம் பட்டாசு பொருள்கள் உள்ளனவா என சோதனை செய்ய தெற்கு ரயில்வே தனிப்படை அமைத்துள்ளது.

அதன்படி, மதுரை கோட்டம் ரயில்வே பாதுகாப்பு படையினா் ஆய்வாளா் கண்ணன் தலைமையில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பயணிகளிடம் சோதனை நடத்தினா். மேலும், துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT