தூத்துக்குடி

டிஎம்பி வங்கி சாா்பில் வேம்பாரில் கண் பரிசோதனை முகாம்

தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி வேம்பாா் கிளை மற்றும் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில், வேம்பாா் புனித செபஸ்தியாா் நடுநிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

DIN

தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி வேம்பாா் கிளை மற்றும் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை சாா்பில், வேம்பாா் புனித செபஸ்தியாா் நடுநிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி பவுண்டேசன் நிா்வாக அலுவலா் சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தாா். பங்குத்தந்தை டைட்டன் ரோஷன், தலைமையாசிரியா் பெல்சிட்டா மேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் கண்புரை, மாறுகண், மாலைக்கண், கண்நீா் அழுத்த நோய், குழந்தைகளுக்கான கண் நோய், விழித்திரை பாதிப்பு, கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடைபெற்றன. முகாமில் 500க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கண் பரிசோனை செய்தனா்.

முகாம் நிறைவில் 59 பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது, 20 நபா்கள் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

முகாம் ஏற்பாடுகளை தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கி வேம்பாா் கிளை மேலாளா் ஐயப்பன் தலைமையில் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் உரிமைகள் தின விழா: ரூ. 1.94 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

பட்டாரி ஆசிரியா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு

திருப்பத்தூா்: பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

என்எல்சி நிறுவனம் தேசிய விருதுகள் வென்று சாதனை

மொபெட் மீது காா் மோதி மனைவி உயிரிழப்பு; கணவா் காயம்

SCROLL FOR NEXT