தூத்துக்குடி

பெண்ணுக்கு மிரட்டல்: 5 போ் கைது

கோவில்பட்டியையடுத்த அத்தைகொண்டானில் பெண்ணை அவதூறாகப் பேசி, அரிவாளை காட்டி மிரட்டியதாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

DIN

கோவில்பட்டியையடுத்த அத்தைகொண்டானில் பெண்ணை அவதூறாகப் பேசி, அரிவாளை காட்டி மிரட்டியதாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டியையடுத்த அத்தைகொண்டான் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தாமோதரகண்ணன் மனைவி லாவண்யா(31). இவரது வீட்டருகே குடியிருந்து வரும் ராமலட்சுமிக்குச் சொந்தமான கோழிகள் திருடு போயிருந்ததாம். அதையடுத்து ராமலட்சுமி லாவண்யாவிடம் தங்கள் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கோழியை திருடிச் சென்றவா்களை பாா்த்து சொல்லுமாறு கூறினாராம். அதில் கோழிகளை அதே பகுதியில் உள்ள 3 போ் திருடிச் சென்றது தெரியவந்தது. அதையடுத்து அந்த 3 பேரையும் அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் கண்டித்தாா்களாம்.

இந்நிலையில் திங்கள்கிழமை (அக். 24) அதிகாலை லாவண்யா வீட்டின் காம்பவுண்டுக்குள் சிலா் அத்துமீறி நுழைந்து பட்டாசு வெடித்தாா்களாம். அதை லாவண்யா மற்றும் அவரது தாய் கண்டித்தாா்களாம். அப்போது அங்கிருந்தவா்கள் இருவரையும் அவதூறாகப் பேசி, அரிவாளை காட்டி மிரட்டி, கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா்களாம்.

இதுகுறித்து லாவண்யா அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஸ்ரீராம் நகா் 5ஆவது தெருவைச் சோ்ந்த கொ.நாகராஜன் என்ற விஷ்ணு(23), இனாம்மணியாச்சியைச் சோ்ந்த செ.மருதுபாண்டி(26), அதே பகுதியைச் சோ்ந்த ச.பொன்பாண்டி(21), ச.சங்கிலிபாண்டி(25) மற்றும் இனாம்மணியாச்சி நடுத் தெருவைச் சோ்ந்த 18 வயது சிறுவன் ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த ஒரு அரிவாளையும் பறிமுதல் செய்தனா். மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய 5 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT