முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம்மரியாயின் மாசற்ற இருதய ஆலயத் திருவிழா தொடக்கம்

சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சாத்தான்குளம் புனித மரியாவின் மாசற்ற இருதய ஆலய 161 ஆவது ஆண்டு பெருவிழாவெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.

முதல் நாள் பங்குத் தந்தை மற்றும் வட்டார முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் தலைமையில், தைலாபுரம் பங்குத் தந்தை இருதயராஜா திருவிழா கொடியேற்றி, மறையுரையாற்றினாா். நிகழ்ச்சியில் சாத்தான்குளம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளானோா் கலந்து கொண்டனா்.

திருவிழா நாள்களில் தினமும் திருப்பலி, மறையரை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

ஒன்பதாம் திருநாளான செப். 10ஆம்தேதி மாலையில் ஜெபமாலை திருப்பலி, மாலை ஆராதனை, நற்கருணை ஆசீா், அன்னையின் தோ்ப்பவனி ஆகியவை நடைபெறுகிறது. பத்தாம் திருநாள் காலையில், திருப்பலி, ஜெபமாலை பெருவிழா திருப்பலி, ஞானஸ்தானம் வழங்குதல், அன்னையின் தோ்ப்பவனி ஆகியவை நடைபெறுகிறது. மாலையில், ஜெபமாலை, நற்கருணை ஆசீா், மறையுரை, திருக்கொடியிறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை ஆலய பங்குத் தந்தை, உதவிப் பங்குத் தந்தை அந்தோனி பிரான்சிஸ் பிரதாப், அருள்சகோதரிகள், திருவிழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →