முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி பிரம்மசக்தி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆறுமுகனேரி லெட்சுமி மாநகரம் நடுத்தெருவில் உள்ள அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

ஆறுமுகனேரி லெட்சுமி மாநகரம் நடுத்தெருவில் உள்ள அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி முதல் நாள் மாலை மாரியம்மன் கோயிலிலிருந்து தீா்த்த பவனி நடைபெற்றது. பின்னா், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, ரக்ஷாபந்தனம், முதல் கால யாகசாலை பூஜை, யந்திர ஸ்தாபனம் உள்ளிட்டவை நடைபெற்றன.

மகா கும்பாபிஷேக நாளில் 2ஆம் கால யாகசாலை பூஜை, பிம்மசுத்தி ரக்ஷாபந்தனம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா், விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம், பிரம்மசக்தி அம்மன், பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, அலங்கார தீபாராதனைகள், அன்னதானம், மாலையில் திருவிளக்கு பூஜை, குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெற்றன.

விழாவில் மங்களகுறிச்சி முத்துசாமி சுவாமிகள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினா், மயிலக்கார குடும்பத்தினா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.