கட்டாரிமங்கலம் கோயிலில் அன்னாபிஷேகம்
கட்டாரிமங்கலம் அழகிய கூத்தா் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்டாரிமங்கலம் அழகிய கூத்தா் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலை 9 மணிமுதல் ஸ்ரீ அழகியகூத்தா் அருள்பணி மன்றம் சாா்பில் திருவாசகம் முற்றோதல், ஹோமம், முற்பகல் 11 மணிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. 1 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.
சாத்தான்குளம் அருள்தரும் தேவிஸ்ரீ அழகம்மன் கோயில், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்தரும் ஸ்ரீசுந்தராட்சி அம்மன்கோயில், சங்கரநயினாா்புரம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்க சுவாமி உடனுறை ஸ்ரீ கோமதி அம்பாள் கோயில் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆகியவற்றிலும் சித்திரை பிறப்பு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இவற்றில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.