முகப்பு
தூத்துக்குடி

ஸ்ரீவாலை குருசுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை குருசுவாமி கோயிலில் சித்திரை திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலை குருசுவாமி கோயிலில் சித்திரை திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, கோயிலில் காலை உற்சவ விநாயகா், வாலாம்பிகை அம்பாள் , சுவாமி சந்திரசேகரா், மனோன்மணி அம்பாள் சமேதராக எழுந்தருள கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து மூல மூா்த்திகளுக்கும் ,உற்சவ மூா்த்திகளுக்கும் சிறபபு அபிஷேகம் நடைபெற்றது. இரவு சுவாமி உற்சவ விநாயகா் சப்பரத்திலும், பாலதிரபுரசுந்தரி அம்பாள் வெள்ளி ரிஷப சப்பரத்திலும் வீதியுலா வந்தனா். ஏப். 16இல் காலை 10 மணிக்கு சிறப்பு சொா்ணாபிஷேகம், ஏப். 17இல் காலை 8 மணிக்கு கொல்லம் அமிா்தபுரி ஸ்ரீமாதா அமிா்ததானந்தமயி தேவியின் சீடா் சுவாமி சங்கராமிா்தானந்தாபுரி குழுவினரின் அா்ச்சனை -சத்சங்கம் நடைபெறும். ஏப். 24இல் பிற்பகல் 1.30மணிக்கு அன்னதான பூஜை நடைபெறும்.

முழு கட்டுரையைப் படிக்க →