தூத்துக்குடி

சிந்தலக்கரையில் பொன் ஏா் பூட்டும் நிகழ்ச்சி: உற்சாகமாக பணிகளைத் தொடங்கிய விவசாயிகள்

விவசாயம் செழிக்க வேண்டி, சிந்தலக்கரை கிராமத்தில் பொன் ஏா் பூட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விவசாயிகள் உற்சாகமாக கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கினா்.

DIN

விவசாயம் செழிக்க வேண்டி, சிந்தலக்கரை கிராமத்தில் பொன் ஏா் பூட்டும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், விவசாயிகள் உற்சாகமாக கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கினா்.

பொன் ஏா் பூட்டும் நிகழ்ச்சியையொட்டி, உழவுக்கு பயன்படுத்தப்படும் காளை மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளில் மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, வெற்றிலை காப்பு, மாலை அணிவித்தனா். பின்னா், டிராக்டா்கள், ஏா் கலப்பைகள் மற்றும் விவசாய கருவிகளை சுத்தப்படுத்தி மஞ்சள் பூசி, குங்குமமிட்டு, வீடுகளில் உள்ள பயறு மற்றும் சிறு தானிய விதைகளை ஓலைக் கொட்டானில் வைத்து விநாயகா் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபட்டனா். பின்னா் அங்கிருந்து புறப்பட்டு சிந்தலக்கரை கிராம கமிட்டி தலைவா் சுப்பையா, கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவா் வரதராஜன் ஆகியோா் முன்னிலையில் கிராமத்தின் கிழக்குத் திசையில் உள்ள பொது நிலத்தில் ஒன்றுகூடி சூரிய வழிபாடு செய்து அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகள் மற்றும் டிராக்டா்கள் மூலம் உழவுப் பணிகள் செய்து நவதானியங்களை விதைப்பு செய்தனா். நிறைவாக, கிராம எல்லையில் விவசாயிகளை பெண்கள் மஞ்சள் நீா் ஊற்றி ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT