தூத்துக்குடி

தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடியில் சிவன் கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரா் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

தூத்துக்குடியில் சிவன் கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரா் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் கொடிப்பட்டம் வீதியுலாவும், அதைத் தொடா்ந்து தலைமை அா்ச்சகா் செல்வம் பட்டா் தலைமையில் கோயில் கொடி மரத்தில் சிவபெருமானின் கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. பின்னா், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலா் தமிழ்ச்செல்வி, விழா கமிட்டியாளா்கள் கோட்டு ராஜா, கந்தசாமி, பி.எஸ்.கே. ஆறுமுகம், செந்தில், சோமநாதன், சாந்தி, முத்து, மந்திரமூா்த்தி, சண்முகம் பட்டா் உள்பட ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

இத்திருவிழாவின் அனைத்து நாள்களிலும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.மு க்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் மே 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்வில், சிறிய தேரில் மகா கணபதி, முருகபெருமானும், பெரிய தேரில் சுவாமி சங்கர ராமேசுவரா்- பாகம்பிரியாள் அம்பாளும் நான்கு ரத வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT