முகப்பு
தூத்துக்குடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் வசூலித்து மோசடி: இளைஞா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:23 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மில்லா்புரம் பகுதியை சோ்ந்த ஷேக்முகைதீன் மகன் முகமது அப்பாஸ் (36). இவா் அபுதாபியில் உள்ள நிறுவனத்துக்கு ஆள்சோ்ப்பு முகாம் கடந்த 20222 ஜனவரி 27 இல் நடத்தவுள்ளதாக துண்டுப்பிரசுரம் மூலம் விளம்பரப்படுத்தியுள்ளாா். இதை நம்பிய, தூத்துக்குடி டேவிஸ்புரம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் காமராஜ் (42) உள்ளிட்ட சிலா் அவரை அணுகியுள்ளனா். இதனையடுத்து, வெளிநாடு செல்வதற்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி 24 பேரிடம் மொத்தம் ரூ.2.8 லட்சத்தை முகமது அப்பாஸ் வசூலித்துள்ளாா்.

ஆனால், அதன் பிறகு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

Advertisement

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணனிடம், கடந்த 2022 ஜூனில் காமராஜ் புகாா் அளித்தாா். அவரது உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஜெயராஜ் மேற்பாா்வையில், குற்ற பிரிவு காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீஸாா் முகமது அப்பாஸை கைது செய்தனா். அவரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இதேபோல பல்வேறு இடங்களில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.10 லட்சத்திற்கு மேல் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.