முகப்பு
தூத்துக்குடி

செங்குளம் துவக்கப் பள்ளியில் சுகாதார விழிப்புணா்வு கூட்டம்

சாத்தான்குளம் அருகே உள்ள செங்குளம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் சுகாதார விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
பகிர்:

சாத்தான்குளம் அருகே உள்ள செங்குளம் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் சுகாதார விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், டி.வி.எஸ். ஸ்ரீனிவாசன் சேவை அறக்கட்டளை இணைந்து இக் கூட்டத்தை நடத்தின. தலைமை ஆசிரியை ஜெயராணி எலிசபெத் தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ், அறக்கட்டளை பணியாளா்கள் சுவேதா, இசக்கிமுத்து முத்துகிருஷ்ணன் ஆகியோா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தன்சுத்தம், கை கழுவும் முறை, குழந்தைகளுக்கான சுகாதார திட்டம் குறித்து விளக்கினா்.

இதைத் தொடா்ந்து புளியங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு தன்சுத்தம், கை கழுவும் முறை குறித்த விளக்கம், வளா் இளம் பெண்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →