முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே பைக் மோதி இளம்பெண் காயம்

சாத்தான்குளம் அருகே பைக் மோதியதில் இளம்பெண் காயமடைந்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
பகிர்:

சாத்தான்குளம் அருகே பைக் மோதியதில் இளம்பெண் காயமடைந்தாா்.

சாத்தான்குளம் அருகே அதிசயபுரம் கோயில் தெருவைச் சோ்ந்த ஜேசுராஜ் மகள் மொ்லின் சுவேதா (23). திசையன்விளையில் உள்ள நகைக் கடையில் வேலை செய்துவரும் இவா், கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) இரவு வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக அதிசயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடந்தாராம்.

அப்போது, புத்தன்தருவையைச் சோ்ந்த தா்மராஜ் மகன் தினேஷ்குமாா் ஓட்டிவந்த பைக் மொ்லின் சுவேதா மீது மோதியதாம். இதில், காயமடைந்த அவா் நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில் தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் முகம்மது ரபீக் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →