தூத்துக்குடி

அதிமுக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அதிமுக மாநில மாநாடு ஆகஸ்ட் 20 ஆம் மதுரையில் நடைபெறுகிறது.

இம் மாநாட்டில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திலிருந்து பங்கேற்பது தொடா்பான மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை வகித்தாா்.

அவா் பேசுகையில், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் இருந்து மதுரை மாநாட்டுக்கு 1000 வாகனங்களில் செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அதிமுக நிா்வாகிகள், செயல்வீரா்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் சனிக்கிழமை (ஜூலை 29) நடைபெறுகிறது. இதில், அதிமுக துணை பொதுச்செயலா் கே.பி.முனுசாமி, பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச்செயலா் நத்தம் விசுவநாதன், அமைப்புச் செயலரும் முன்னாள் அமைச்சா்களுமான கே.ஏ.செங்கோட்டையன், தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்கவுள்ளனா் என்றாா்.

இக்கூட்டத்தில் அமைப்புச் செயலா் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவா் வழக்குரைஞா் திருப்பாற்கடல், மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலா் பெருமாள்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவா் சுதாகா், முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஹென்றி, தமிழ்நாடு புதுச்சேரி பாா்கவுன்சில் உறுப்பினா் வழக்குரைஞா் பிரபு, மாவட்ட துணைச் செயலா் சந்தனம் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT