தூய பனிமய மாதா பேராலயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக திருப்பலி
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்காக திருப்பலி நிறைவேற்றப்பட்து.
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழாவின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்காக திருப்பலி நிறைவேற்றப்பட்து.
இப்போராலயத்தில் 441ஆவது ஆண்டு திருவிழா, 16ஆவது தங்கத் தோ் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து இரண்டாம் நிகழ்ச்சியாக, அதிகாலையில் திருப்பலியும், காந்திநகா், லூா்தம்மாள்புரம், வெள்ளப்பட்டி, தருவைகுளம் ஆகிய பங்கு இறைமக்கள், திரு இருதய அருள்சகோதரிகள் பங்கேற்ற திருப்பலியும் நடைபெற்றன. இதில், அந்தந்த பங்குத் தந்தையா் திருப்பலி நிறைவேற்றினா்.
பின்னா், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில், லூசியா இல்ல இயக்குநரும் வட்டார அதிபருமான ஜான் பென்சன் திருப்பலி நிறைவேற்றினாா். ஏராளமான இறைமக்கள் பங்கேற்றனா். மாலையில் பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ், நோயாளிகளுக்காக சிறப்பு திருப்பலி நிறைவேற்றி, ஜெபமாலை, நற்கருணை ஆசீா் வழங்கினாா்.
இத்திருவிழாவில், நாள்தோறும் அதிகாலை 4.30, நண்பகல் 12, பிற்பகல் 3, இரவு 7.15 ஆகிய நேரங்களில் சிறப்பு ஜெபமாலை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மறை மாவட்ட ஆயா்கள் பங்கேற்கும் சிறப்பு திருப்பலி நடைபெறும் என பேராலய நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.