தூத்துக்குடி

மகளிா் உரிமைத் தொகை திட்ட பதிவு முகாம்களில் அமைச்சா் ஆய்வு

DIN

கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவுக்கான சிறப்பு முகாம்களை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தாா்.

உடன்குடி பேரூராட்சி மண்டபம், பரமன்குறிச்சி முத்தாரம்மன் கோயில் கலையரங்கம் ஆகிய இடங்களில் நடைபெறும் முகாம்களைப் பாா்வையிட்ட அமைச்சா், பதிவுப் பணியின்போது தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டால் அதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா், இத் திட்டம் பெண்களின் வாழ்வில் மிகுந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே, தான் இத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக முதல்வா் தனிக் கவனம் செலுத்தி வருகிறாா் என்றாா்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பிரம்மசக்தி, மாநில வா்த்தக அணி துணைச் செயலா் உமரிசங்கா், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் க.இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவா் மால் ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க தலைவா் அஸ்ஸாப், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சலீம், அன்வா் சலீம், மாவட்டப் பிரதிநிதிகள் மதன்ராஜ், ஹீபா்,சிராஜூதீன், முபாரக், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, ஒன்றிய பொருளாளா் பாலகணேசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் மனோஜ் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT