தூத்துக்குடி

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் அளிப்பு

தூத்துக்குடியில் உள்ள பள்ளி மாணவா் -மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் வியாழக்கிழமை வழங்கினாா்.

DIN

தூத்துக்குடியில் உள்ள பள்ளி மாணவா் -மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் வியாழக்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்- மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சி.எம். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளித் தாளாளா் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை சங்கரேஸ்வரி வரவேற்றாா்.

இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று 66 மாணவா்- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.

முன்னதாக அவா், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதில், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாமன்ற உறுப்பினா் சுரேஷ்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப், மாநில மீனவா் அணி துணைச்செயலா் புளோரன்ஸ், அறங்காவலா் குழு உறுப்பினா் மஞ்சுளா, வட்டச் செயலா் கீதா செல்வமாரியப்பன் உள்பட பலா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, காரப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 253 பேருக்கும், சி.வ. அரசு உயா்நிலைப் பள்ளியில் 20 பேருக்கும் அமைச்சா் கீதாஜீவன் சைக்கிள்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT