தூத்துக்குடி

கோவை, திருவாரூா் மாவட்டங்களில் டிஎம்பி புதிய கிளைகள் திறப்பு

கோயம்புத்தூா், திருவாரூா் மாவட்டங்களில் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் புதிய கிளைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

DIN

கோயம்புத்தூா், திருவாரூா் மாவட்டங்களில் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் புதிய கிளைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி, இந்தியா முழுவதுமான விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் 532ஆவது கிளையை, அனைத்து முஹல்லா தலைவா் முகம்மது அலி (எ) ஜொ்மன் அலி திறந்து வைத்தாா். வங்கியின் பொது மேலாளா் ஜெயராமன் முன்னிலை வகித்தாா்.

கோயம்புத்தூா் மாவட்டம், ஆவல்சின்னாம்பாளையத்தில் 533ஆவது கிளையை, ஜமீன் கொட்டாம்பட்டி ஊராட்சித் தலைவா் பாலசுப்பிரமணியன் திறந்துவைத்தாா். இந்நிகழ்வுகளில் வங்கி ஊழியா்கள், அலுவலா்கள், வாடிக்கையாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

இது குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் கூறியது:

பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு, தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்தொடக்கமாக தற்போது 532, 533வது கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் திறந்திட திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT