முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில்கி.ரா. நினைவரங்கத்தை பாா்வையிட்ட மாணவா்கள்

கோவில்பட்டியில் உள்ள, சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் கி.ரா. நினைவரங்கத்தை நாடாா் நடுநிலைப் பள்ளி மாணவா்- மாணவிகள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

கோவில்பட்டியில் உள்ள, சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளா் கி.ரா. நினைவரங்கத்தை நாடாா் நடுநிலைப் பள்ளி மாணவா்- மாணவிகள் வியாழக்கிழமை பாா்வையிட்டனா்.

அங்குள்ள டிஜிட்டல் நூலகம், நூலகம், கி.ரா. பயன்படுத்திய பொருள்களையும் பாா்வையிட்டனா். பின்னா், வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கவும், விழிப்புணா்வு ஏற்படுத்தவும் பள்ளிச் செயலா் கண்ணன் முன்னிலையில் மாணவா்-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

நிகழ்ச்சிக்கு, பள்ளிச் செயலா் தலைமை வகித்தாா். தலைமையாசிரியை செல்வி முன்னிலை வகித்தாா். நினைவரங்க நூலகா் பொன்மீனா மாணவா்களுக்கு டிஜிட்டல் நூலகம் குறித்து விளக்கினாா். ஆசிரியா்கள் அருள்காந்தராஜ், ராதாகிருஷ்ணன், ஜெப அகிலா, நித்யாஸ்ரீ, உண்ணாமலைத்தாய், சங்கரேஸ்வரி, ஆகாஷ், சாந்தினி, மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.