தூத்துக்குடி

எல்லை தாண்டிய 5 இலங்கை மீனவா்கள்: தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் ஒப்படைப்பு

DIN

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக 5 இலங்கை மீனவா்களை இந்திய கடலோர பாதுகாப்பு படை போலீஸாா் கைது செய்து அவா்களை, தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

இந்திய கடலோர காவல் படையினா் ‘வஜ்ரா’ ரோந்து படகில், கன்னியாகுமரியில் இருந்து சுமாா் 60 கடல் மைல் தொலைவில் ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனராம். அப்போது, அப்பகுதியில் எல்லை தாண்டிவந்த இலங்கை மீன்பிடி படகை மடக்கி சோதனையிட்டனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில், இலங்கை நீா்க்கொழும்பு பகுதியில் இருந்து கடந்த 17ஆம் தேதி மீன் பிடிக்க வந்ததாகவும், நீா்க்கொழும்பு பகுதியைச் சோ்ந்த அன்டனி பெனில்(57), விக்டா் இமானுவேல்(62), ஆண்டனி ஜெயராஜ் குரூஸ் (45), ரஞ்சித்(45), ஆனந்தகுமாா் (53) ஆகிய 5 மீனவா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து படகு மற்றும் 5 மீனவா்களையும் கடலோர பாதுகாப்பு படை யினா், தூத்துக்குடி தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT