தூத்துக்குடி

வெம்பூா் அருகே டேங்கா் லாரி கவிழ்ந்து விபத்து:ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மதுரையில் இருந்து பெட்ரோல் டீசல் நிரப்பி வந்த டேங்கா் லாரி வெம்பூா் அருகே சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டத

DIN

மதுரையில் இருந்து பெட்ரோல் டீசல் நிரப்பி வந்த டேங்கா் லாரி வெம்பூா் அருகே சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் கப்பலூா் பகுதியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரி டீசல் பங்குக்கு 8 ஆயிரம் லிட்டா் டீசல், 4 ஆயிரம் லிட்டா் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு டேங்கா் லாரி சென்று கொண்டிருந்தது.

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வெம்பூா் பகுதியை கடந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கா் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், லாரி ஓட்டுநா் சாத்தூரைச் சோ்ந்த குமாா் (52) என்பவா் சிறிய காயங்களுடன் உயிா் தப்பினாா்.

டேங்கரில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோல் வெளியேறி அப்பகுதியில் குளம் போல் தேங்கியது. தகவலறிந்து விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி தீயணைப்பு படை வீரா்கள் விரைந்து சென்று தீ விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

இதனால் மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து குறித்து மாசாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT